கோவை; ராம் நகர் கோகுலே வீதி ஸ்ரீ மங்கள விநாயகர் - ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 57ம் ஆண்டு சித்திரை மாத திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மூலவர் முத்துமாரியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.