கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2024 03:05
கோவை ; அன்னூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி விழா கடந்த 12ம் தேதி காலை விக்னேஸ்வர ஆராதனையுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து புண்யா வாசனம் ஹோமம் , திருமஞ்சனம் நடந்தது. காலை 7 - 30 மணி அளவில் அலங்கார பூஜை, மகா தீபாரதனை, சுவாமி உற்சவர் உட்பிரகார புறப்பாடு ஆகியன நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.