பதிவு செய்த நாள்
15
மே
2024
11:05
உடுமலை; உடுமலை டி.வி.பட்டிணம் பிளேக் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
உடுமலை தளி ரோடு டி.வி., பட்டணத்தில் அமைந்துள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில், திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. சக்தி மதகு தீர்த்தம் எடுத்து வந்து, திருக்கம்பம் போடப்பட்டது. இதையடுத்து, திருமூர்த்திமலை மற்றும் கொடுமுடி உள்ளிட்ட புண்ணிய தலங்களில் இருந்து, தீர்த்தம் எடுத்து வந்து, திருக்கம்பத்துக்கு ஊற்றி வழிபாடு செய்தனர். கடந்த, 13ம் தேதி பவளக்கொடி கும்மியாட்டம் நடந்தது. நேற்று, சப்பரத்தில் அம்மனை எழுந்தருள செய்து, உலா வந்தனர். மாலை, 5:00 மணியிலிருந்து, 8:00 மணிக்குள் அம்மன் திருக்கல்யாணம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, (15ம் தேதி) பொங்கல், மாவிளக்கு எடுத்து வருகின்றனர். நாளை (16ம் தேதி) அம்மன் வீதி உலா , மஞ்சள் நீராட்டு, அபிேஷக பூஜை நடக்கிறது.