சாப்பிட்ட இலையில் அங்கப் பிரதட்சணம் செய்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2024 02:05
கரூர்; கரூர் அருகே நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் 110வது ஆராதனை விழாவை முன்னிட்டு, சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
கரூர் மாவட்டம், நெரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சதாசிவ பிரமேந்திராள் கோவில் அருகே உள்ள அக்ரஹாரத்தில், ஆண்டு தோறும் ஆராதனை விழா நடந்து வருகிறது. அதன்படி இந்தாண்ஐ 110வது ஆராதனை விழாவை முன்னிட்டு, சதாசிவ பிரமேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆராதனை உற்சவமும், லட்சார்ச்சனையும், ஸந்தர்பனையும் நடந்தது. அதைத்தொடர்ந்து சதாசிவ பிரமேந்திராள் உருவபடம் அவரது ஜீவசமாதிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, சிறப்பு லட்சார்ச்சனைகள் நடந்தது. தொடர்ந்து மதியம் அக்ரஹாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. பக்தர்கள் சாப்பிட்டு முடித்த இலையில், ஆண், பெண் பக்தர்கள் அங்கபிரதட்ஷணம் செய்தனர். அப்போது சதாசிவ பிரமேந்திராள் கீர்த்தனைகள் பாடப்பட்டது. ஆராதனை விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு இலையில் அன்னதானம் வழங்கும் போது, அதில் எதாவது ஒரு ருபத்தில் சதாசிவ பிரமேந்திராள் அமர்ந்து சாப்பிடுவதாகவும் ஐதீகம் உள்ளது. இதனால் பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கபிரதட்ஷணம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடந்து வருகிறது.