திருவாடானை; திருவாடானை அருகே ஊமைஉடையான் மடை கிராமத்தில் மஸ்ஜிதுத் தக்வாஜூம்ஆ புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடந்தது. அக்கிராமத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் சீர்வரிசையுடன் சென்று திறப்பு விழாவை கொண்டாடினர். முன்னதாக கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலிருந்து தாம்பூல தட்டில் தேங்காய், பழம் வைத்து பெண்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக சென்று விழாவை சிறப்பித்தனர். மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி இருந்தது. விழாவை முன்னிட்டு பள்ளிவாசல் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.