சுசீந்திரம் கோவிலில் தெப்பத்தேரோட்டம்; சிவபெருமான், பெருமாள் பவனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2024 01:05
சுசீந்திரம், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆயிரம் எண்ணெய் விளக்குகளின் நடுவே நேற்று இரவு தெப்பத்தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்து டன் சித்திரை தெப்பத்திரு விழா துவங்கியது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. பத்தாம் நாள் திருவிழா வான நேற்று இரவு 8.10 மணிக்கு அலங்கரிக்கப் பட்ட தெப்பத்தில் தம்பதி சமேதராய் சிவபெருமான் திருவேங்கட விண்ணவரம் பெருமாள், ஆகிய இருவரும் மேளதாளங் கள் முழங்க சப்பரத்தில் பவனி வந்து தெப்பத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து ஆயிரம் எண்ணெய் விளக்குகள் ஏற்றப் பட்ட தெப்பக் குளத்தை சுற்றி மூன்று முறை தெப் பம் வலம் வந்தது. முதல் சுற்றை காக்குமூர் இளை ஞர்களும், இரண்டாம் சுற்றை சுசீந்திரம் மேலத் தெரு இளைஞர்களும், மூன்றாம் சுற்றை சுசீந்திரம் கீழத்தெரு இளைஞர்களும் இழுத்து வந்தனர். மூன்றா வது முறை தெப்பத்தில் வலம்வந்த சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட் டது. தொடர்ந்து தெப்பக்கு ளத்தில் ஆராட்டு நடந்தது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட அறங் காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், இணை ஆணையர் ரத் தினவேல் பாண்டியன், கோவில் மேலாளர் ஆறு முகதரன், சுசீந்திரம் டவுன் பஞ் தலைவர் அனுசுயா, பூதலிங்கம் பிள்ளை மற் றும் ஏராளமான ன பக்தர் கள் கலந்து கொண்டனர். சுசீந்திரம் பஞ்சாயத்து நிர் வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்க ளுக்கு சிறப்பான ஏற்பாடு கள் செய்யப்பட்டிருந்தன.