பதிவு செய்த நாள்
19
மே
2024
11:05
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் 5 தேர்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நள்ளார தியாகேசா தியாகேசா என்று முழுக்கம் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
காரைக்கால் திருநள்ளார் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர் கோவிலில் சனீஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.இக்கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த 5ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினம் விநாயகர்,சுப்பிரமணியர் மற்றும் சுவாமி அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா,தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை தர்பாரண்யேஸ்வரர் சுவாமி வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று திருத்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. விழாவை ஒட்டி இன்று செண்பக தியாகராஜசுவாமி தேருக்கு எழுந்தருளினார். இதேபோல் மற்றொரு தேரில் நீலோத்பாலாம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் 5தேர்தளில் எழுந்தருளினர். பின்னர் தேர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் சாய் சரவணன்,சிவா எம்.எல்.ஏ.,துணை ஆட்சியர் ஜான்சன், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீ மத்சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அருணகிரிநாதன் ஆகியோர் திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து நள்ளாற தியாகேசா தியாகேசா என்று முழக்கமிட்டு தேரை இழுத்து சென்றனர். ஒரே நேரத்தில் 5தேர்கள் இழுப்பதால் அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர். ஆர்வத்துடன் ஒவ்வொரு தேர்களையும் இழுத்து சென்றனர். இன்று 20ம் தேதி இரவு செண்பக தியாகராஜ சுவாமி எண்ணைய்க்கால் மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும்,தொடர்ந்து நள்ளிரவு சனீஸ்வர பகவான் தங்ககாக வாகனத்தில் சகோபுர வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.வரும் 21ம் தேதி இரவு தெப்போற்சவம் நடைபெறுகிறது.தேர்திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிமக்கள் பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள் பாதுகாப்பு குறித்து எஸ்.பி.,பாலச்சந்தர் தலைமையில் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுப்பட்டனர்.