நத்தம் கைலாசநாதர் கோவில் திருவிழா; யானை வாகனத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2024 11:05
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.தொடர்ந்து தினமும் கைலாசநாதர்,செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்து வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, மற்றும் மாலையில் கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் யானை மற்றும் அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் 20-ம் தேதி மாலையும், திருத்தேரோட்டம் 21-ம் தேதி காலையும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.