வெள்ளலூர் செம்பூர் அய்யனார் கோயில்களில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2024 11:05
மேலுார்; கோட்டநத்தாம்பட்டி கடம்பூர், புதுப்பட்டி பெரம்பூர், வெள்ளலூர் செம்பூர் அய்யனார் கோயில்களில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று புரவி எடுப்பு திருவிழா துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாளான நேற்று பழையூர்பட்டி மந்தையில் உள்ள புரவிகளுக்கு கிராமத்தார்கள் மரியாதை செய்து கிடா வெட்டி புரவிகளுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து வெள்ளலுார் நாட்டு கிராமத்தார்கள் தலைமையில் புரவிகளை சுமந்து ஒன்றரை கி.மீ., தொலைவில் உள்ள வெள்ளலுார் மந்தைக்கு கொண்டு வரப்பட்டது. மந்தையில் இருந்து இன்று (மே 19) 3 புரவிகளை கடம்பூர் அய்யனார் கோயிலுக்கும், (மே 20) 2 புரவிகளை புதுப்பட்டி பெரம்பூர் அய்யனார் கோயிலுக்கும், ( மே 21 ) 2 புரவிகளை வெள்ளலுார் செம்பூர் அய்யனார் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். இவ் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வர்.