திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக விழா; நாளை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2024 10:05
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவை முன்னிட்டு நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். மே13 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி உற்ஸவ திருத்தளிநாதரும், சிவகாமி அம்பாளும் வாகனங்கள் திருவீதி வலம் வந்தனர். மே16 ல் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் சார்பில் திருத்தளிநாதருக்கு மந்திர நீர் முழுக்காட்டு, தீபாராதனை நடந்தது. மே17 ல் திருக்கல்யாண வைபோவமும் நடந்தது. நேற்று கைலாயம், சிம்மம் வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று காலை நடராஜர் திருவீதி உலாவும், இரவில் குதிரை வாகனத்தில் சுவாமி,அம்பாள் திருவீதி உலாவும் நடைபெறும். நாளை தேரோட்டத்தை முன்னிட்டு விநாயகர், சிவகாமி அம்மன், திருத்தளிநாதர் உள்ளிட்ட ஐம்பெரும் கடவுளர்கள் காலை 5:10 மணிக்கு மேல் காலை 6:00 மணிக்குள் 3 தேர்களில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து மாலை 4:35 மணிக்கு மேல் மாலை 4:50 மணிக்குள் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெறும். மே22 ல் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு சீதளித் தெப்பக்குள மண்டபத்தில் மாலை 6:00 மணி அளவில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளல் நடைபெறும்.