திருப்பரங்குன்றம்; மதுரை, பழங்காநத்தம் அக்ரஹாரம் கோதண்டராம சுவாமி கோயிலில், சுவாமி கிருஷ்ணசந்த்ரவர்மன் - ராதா பிராட்டி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமத்துடன் துவங்கிய பூஜைகள் நேற்று காலை பூர்த்தி செய்யப்பட்டது. சுவாமி கிருஷ்ணசந்த்ரவர்மன் - ராதா பிராட்டிக்கு அபிஷேகம் முடிந்து திருக்கல்யாண அலங்காரமாகி திருக்கல்யாணம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மூலவர்கள், உற்சவர்கள் கோதண்ட ராமர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. திருமணம் ஆகாதவர்களின் ஜாதகம் பூஜிக்கப்பட்டு மட்டை தேங்காய் பிரசாதத்துடன் திருப்பி கொடுக்கப்பட்டது.