ஜெயங்கொண்டம் கோவில் கும்பாபிஷேக விழா பாதிரியார்களுக்கு வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2024 03:05
பெரம்பலுார்: அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நடுவலுார் கிராமத்தில் விநாயகர், மாரியம்மன், அய்யனார், அய்யப்பன் கோவில்களுக்கான கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதற்காக ஊர் பொதுமக்கள் அழைப்பிதழ்களை அனைவருக்கும் வழங்கினர். விழாவில் பங்கேற்க அங்குள்ள கிறிஸ்துவ பாதிரியார்களுக்கும் கிராம மக்கள் அழைப்பு விடுத்தனர். அதன்படி கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்த போது, நடுவலுார் புனித சூசையப்பர் ஆலய பாதிரியார்கள் ராபர்ட் மற்றும் ஜோசப் தன்ராஜ் ஆகியோர் கோவிலுக்கு வந்தனர். கிராம மக்கள் திரண்டு நின்று அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர், பாதிரியார்கள் தங்கள் காலணிகளை கழற்றிவிட்டு, கோவிலின் விமான கலசங்கள் பொருத்தப்பட்ட உச்சிக்கு சென்றனர். அங்கு சிவாச்சாரியர்கள் ஆகம வேத மந்திரங்கள் கூறி கோவிலின் கலசத்துக்கு புனித நீர் ஊற்ற பாதிரியர்கள் இரு கரம் கூப்பி வணங்கினர். தொடர்ந்து, ஊர் மக்கள் சார்பில் பாதிரியார்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.