காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த, பள்ளம்பாக்கம் கிராமத்தில், தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஜாத்திரை நடைபெறும். ஐந்து ஆண்டுகளுக்கு பின், சித்திரை ஜாத்திரை, மே- 13ம் தேதி துவங்கியது. நேற்று. பகல், 7வது நாள் திருவிழா நடந்தது. மாலை 4:00 மணி அளவில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் வீதியுலா வந்தார். அனைத்து வீடுகளிலும், பலகாரம் படையலிட்டு, கூழ்வார்த்தல் நிகழ்சியும், இரவு வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது.