நரசிம்ம ஜெயந்தி; தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2024 12:05
திருப்பூர்; திருப்பூர் மாவட்டம் தாளக்கரை பகுதியில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சந்தன காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நரசிம்மரை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.