வைகாசி சனி; அன்னூர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2024 10:05
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் பக்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் வெண்ணிற வஸ்திரத்தில் புஷ்ப அலங்காரத்துடன் அனுமன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.