கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் மலர் வழிபாட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2024 10:05
கொடைக்கானல், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் மலர் வழிபாட்டு விழா நடந்தது.கொடைக்கானல் சுற்றுலா தலத்தில் ஆன்மீக தலமாக விளங்கும் பழநி முருகன் கோயிலின் உபகோயிலான குறிஞ்சியாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் மே மாதம் மலர் வழிபாட்டு விழா நடக்கும். இதில் முன் மண்டபங்கள் பல்வேறு வகையான மலர்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு முருகன் ராஜ அலங்காரத்தில் பூக்களுடன் காட்சியளித்தார். முன்னதாக சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. விழாவில் முன் மண்டபம், முருகனின் சிறப்பை குறிக்கும் திருத்தேர், வேல், பூக்கோலம் உள்ளிட்டவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. கோடை இன்டர்நேஷனல் விடுதி நிர்வாக இயக்குனர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். கோயில் கண்கானிப்பாளர் அண்ணாதுரை கலந்து கொண்டார். ஏராளமனோர் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. மலர் வழிபாட்டுக்கான மலர்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளை கோடை இன்டர்நேஷனல் ஹோட்டல் செய்திருந்தது.