நத்தம் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2024 10:05
நத்தம்; நத்தம் கர்ணம் தெரு செல்வவிநாயகர், மதுரகாளியம்மன், பாலமுருகன் கோவில்களில் திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த மே 17-ம் தேதி கன்னிமார் தீர்த்தம் அழைத்து அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் காவல் தெய்வங்களுக்கு பழம் வைத்தல் நடந்தது. அன்றிரவு அம்மன் குளத்தில் இருந்து சக்திகரகம் அதிர்வேட்டுக்கள் முழக்க கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. பின்னர் அங்கு அம்மனுக்கும், சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, அரண்மனை பொங்கல், முளைப்பாரி எடுத்து தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சக்திகரகம் அம்மன்குளம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் நேற்று மாலை அம்மன் சயனக் கோலத்தில் ஊஞ்சல் உற்சவம் காணும் நிகழ்ச்சியுன் திருவிழா நிறைவு பெற்றது.இதில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், தொழிலதிபர் அமர்நாத் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள், கர்ணம் தெரு இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.