பதிவு செய்த நாள்
25
மே
2024
01:05
நாகர்கோவில்; கன்னியாகுமரி ஹிந்து திருத்தொண்டர் பேரவையால் முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி சிறப்பாக நடத்தப் பட்டது. திருமுறை ஒத, கயிலாய வாத்தியம் இசைக்க கடற்கரை நோக்கி நடராஜர் புறப்பட்டார். பெண்கள் அகல் விளக்கு ஏற்ற மஹா தீபத்தை குரு சிவச்சந்திரன், செல்ல மாரியப்ப மகராஜ் பாபாஜி சுவாமிகள், கணேஷ் சூப்பர் கெட் மார்க் மகாலிங்கம், குஎஸ்ஏவிஏ குழுமம் அரவிந்த், காயத்திரி நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஏற்றினார். ஏற்பாடுகளை பேரவையின் தலைவர் ராஜகோபால், பொது செயலாளர் சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். அனுஷியா செல்வி ஒருங்கிணைத்தார், மேலும் ஜெயராம், சஞ்சீவ் குமார், சுயம்புலிங்கம், குமார், சிவகாமி, ஜெனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.