பதிவு செய்த நாள்
25
மே
2024
01:05
திட்டக்குடி; திருச்சியில் நடக்கவுள்ள ஆன்மிக விழாவிற்கு, உலக சித்தர்கள் சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் இந்து மகாசபா தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
உலக சித்தர்கள் சிவனடியாரக்ள் சர்வ சமய கூட்டமைப்பின் சார்பில், வரும் ஜூன் 30ம் தேதி திருச்சி திருவானைக்காவலில் ஓய்வுபெற்ற ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் தலைமையில் ஆன்மிக விழா நடக்க உள்ளது. தொழுதுார் அடுத்த திருமாந்துறையில் இந்து மகாசபா தலைவர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் அனுகூல ராஜசேகர சுவாமி, வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர். விழாவில் சித்தர்கள், சிவனடியார்கள், வைணவ பக்தர்கள், சன்மார்க்க சங்கத்தினர், ஆன்மிக அமைப்பின் தலைவர்கள், கோவில் அறக்கட்டளை தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.