50 ஆண்டுகளுக்கு பிறகு.. தருமபுரத்தில் யானை மீது திருமுறை திருவீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2024 04:05
மயிலாடுதுறை; மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழாவின் நான்காம் நாள் விழாவான திருமுறை வீதியுலா நடந்தது. அதனையொட்டி தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகள் யானை மீது ஏற்றப்பட்டு திருவீதியுலா நடந்தது. ஆதீன நான்கு வீதிகளிலும் பக்தர்கள் பூர்ணகும்;ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். ஆதீன பங்களா வாயிலில் தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் திருமுறைகளுக்கு சிறப்பு ஆரத்தி எடுத்து வழிபாடு நடந்தது. பாடசாலை மாணவர்கள் திருமுறைகள் ஓதியவாரு வீதியுலா சென்றனர். பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த இந்நிகழ்வு 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் ஆதீன கட்டளை விசாரணை திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், சிவகுருநாததம்பிரான் சுவாமிகள், சட்டநாததம்பிரான் சுவாமிகள் உட்பட தம்பிரான் சுவாமிகள், ஆதீன கல்லூரி செயலர் செல்வநாயகம், முதல்வர் சாமிநாதன் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.