விழுப்புரம்; விழுப்புரத்தில் ஏழை முத்து மாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழா நேற்று முன்தினம் கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 8:30 மணிக்கு விமானம் மகா கும்பாபிஷேகமும், 8:45 மணிக்கு ஏழை முத்து மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது.பின், மாலை 4:00 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவில், லட்சுமணன் எம்.எல்.ஏ., உட்பட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.