கமுதி; கமுதி அருகே வலையபூக்குளம் கிராமத்தில் பெரிய முத்தம்மன், சந்தன மாரியம்மன், பத்ரகாளியம்மன், பெரியாண்டவர் கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது.இதனை முன்னிட்டு மே 13ம் தேதி கொடியேற்றம்,காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.தினந்தோறும் அம்மனுக்கு சிறப்புபூஜைகள், அபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு காப்புகட்டிய பக்தர்கள் பால்குடம் ,அக்னிசட்டி, பூக்குழி இறங்கினர்.கிராமமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். முளைக்கட்டு திண்ணையில் இருந்து கிராமத்தில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக முளைப்பாரி தூக்கி சென்று குண்டாறில் கரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை வலையபூக்குளம் க்ஷத்திரிய நாடார்கள் உறவின்முறை நிர்வாகிகள் செய்தனர்.