செங்கல் சிவபார்வதி கோவிலில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2024 02:05
களியக்காவிளை; களியக்காவிளை அருகே உதியன்குளம்கரை செங்கல் ஊராட்சிக்குட்பட்ட மகேஸ்வரத்தில் சிவ பார்வதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் மற்றும் வைகுண்டம் உலக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த கோவில் மற்றும் பல்வேறு இடங்களில் சமய வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த ச மய வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்வி உபகரணங்களை சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி வழங்கினார். இதில் கோவில் நிர்வாகிகள், சமயவகுப்பு ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.