பதிவு செய்த நாள்
07
நவ
2012
11:11
ஊட்டி: ஊட்டி காந்தல் மூவுலகரசியம்மன் கோவிலுக்கு சொந்தமான வீடுகளில் வசிப்போர் ஒரு லட்சம் ரூபாய் வரை வாடகை பாக்கி வைத்துள்ளனர். இந்து அறநிலைய ஆட்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை அனுபவித்து அதற்குரிய வாடகை பாக்கியை விரைவில் வசூலிக்க அறநிலைய ஆட்சித்துறை ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, காந்தல் மூவுலகரசியம்மன் கோவிலுக்கு சொந்தான வீடுகளில் வசிக்கும் மூர்த்தி 1,390 ரூபாய், ஸ்டேன்லி 15 ஆயிரத்து 125 ரூபாய், ரத்தினவேலு 5,600 ரூபாய், மோகன் 4,018 ரூபாய், அவரது பெயரில் உள்ள மற்றொரு வீட்டிற்கு 5,515 ரூபாய், ஆஷா 4,032 ரூபாய், பாத்திமா 6,372 ரூபாய், ரங்கசாமி ஐயர் 2,592 ரூபாய், கன்னியப்பன் 10 ஆயிரத்து 998 ரூபாய், தர்மன் 22 ஆயிரத்து 10 ரூபாய், ராஜாமணி 350 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர்.கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்தி வரும் பார்வதி 18 ஆயிரத்து 80 ரூபாய், வரதராஜன் 5,400 ரூபாய் பாக்கி வைத்துள்ளனர் என பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.