மணாலி; ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலியில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க ஹிடிம்பா தேவி கோயில். ஹிமாலயத்தின் மலையடிவாரத்தில் அடர்ந்த காட்டின் நடுவே அமைந்துள்ளது இக்கோயில். இக்கோவில் சிறந்த சுற்றுலாத் தலமாகவும், ஆன்மிகத் தலமாகவும் இருப்பதால் தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர். தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஹிமாச்சல பிரதேசத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் மணாலியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஹிடிம்பா தேவி கோயிலில் தரிசனம் செய்தனர்.