முருகன் கோயில் மூலஸ்தானத்தில் ஆண் மயில் முருகப்பெருமானை தரிசித்தது; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2024 02:05
திருப்பூர்; பல்லடம், வடமலைப்பாளையம் முருகன் கோயிலில் வைகாசி விசாகவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் பூஜை நடைபெற்று கொண்டிருந்த போது திடிரென ஒரு ஆண் மயில் கோவிலுக்குள் வந்தது. அது முருகன் மூலஸ்தானத்தின் முன் நின்று பூஜை முடியும் வரை முருகனை வழிபட்டது. முருகனுடன் சேர்ந்து அந்த மயிலுக்கும் ஆரத்தி காட்டப்பட்டது. முருகப்பெருமானின் வாகனமான மயில் வைகாசி விசாக வழிபாட்டில் வந்து, ஆசையாமல் நின்று சுவாமியை வழிபட்டத்தை கண்ட பக்தர்கள் பரவசத்துடன் அதை தரிசனம் செய்தனர். அப்போது, அங்கு இருந்த பக்தர்கள் தன் மொபைல் போனில் எடுத்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.