அயோத்தி செல்லும் வில் அம்பு; சிருங்கேரி மடத்தில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2024 03:05
அயோத்தி; ஸ்ரீராமருக்கு பக்தர் ஒருவர் வழங்கும் ஒரு கிலோ தங்கம், 12 கிலோ வெள்ளியில் உருவான 6 அடி உயரமுள்ள வில், அம்புக்கு சிருங்கேரி மடத்தில் சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது.
அயோத்தியில் பலராமருக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் பல்வேறு காணிக்கைகள் வழங்கி வருகின்றனர். சமீபத்தில் சில பக்தர்கள் ராம்லாலா மீது கொண்ட பக்தியின் காரணமாக பால ராமருக்கு வெள்ளி வில் மற்றும் அம்புகளை உருவாக்கினர். மிக அழகான, மயக்கும் வெள்ளி வில்லும் அம்பும் சிருங்கேரி பீடத்தை அடைந்தது. அங்கு சிருங்கேரி பாரதி தீர்த்த மகாஸ்வாமிஜி பூஜைகளை நடத்தினார். தொடர்ந்து. இளைய குரு மிதுசேகர சுவாமிகள் வெள்ளி வில், அம்புக்கு பூஜை நிகழ்ச்சிகளை நடத்தினார். பிறகு அயோத்திக்கு அனுப்பி வைத்தனர். விரைவில் அயோத்தில் இந்த வில் அம்பு, பால ராமர் கையை அலங்கரிக்க உள்ளது.