மேட்டுப்பாளையம்; சிறுமுகை அருகே மூலத்துறையில் உள்ள , செல்வவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. சிறுமுகை அடுத்த மூலத்துறை காந்தி நகரில், செல்வவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடந்தன. கும்பாபிஷேக விழா, 25ம் தேதி முதல் யாக வேள்வி பூஜையுடன் துவங்கியது. கோபுரத்தில் விமான கலசம் நிறுவுதல், சுவாமிகளின் திருமேனிகள் பீடத்தில் அமைத்தல் ஆகியவை சிறப்பு பூஜைகளுக்கு பின் நடந்தன. இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. மூலத்துறை குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் யாக வேள்வி பூஜைகளை நடத்தினர். 26ம் தேதி காலையில், யாக சாலையில் இருந்து தீர்த்தகுடங்களை, கோவிலை சுற்றி எடுத்து வந்தனர். பின்பு ஒன்பது மணிக்கு சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமி கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். பின்பு செல்வ விநாயகர் சுவாமிக்கு அபிஷேகம் நடை பெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, விநாயகர்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, காந்தி நகர் ஊர் பொதுமக்கள் செ ய்திருந்தனர்.