18 அடி உயர பாலசுப்பிரமணிய சுவாமிக்கு கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2024 04:05
சேரன்மகாதேவி ; சேரன்மகாதேவி அருகே18 அடி உயர விஸ்வரூப பாலசுப்பிரமணிய சுவாமிக்கு இன்று (28ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சேரன்மகாதேவியிலிருந்து களக்காடு செல்லும் வழியில் பூதத்தான் குடியிருப்பு கிராமத்தின் மெயின் ரோட்டில் திருச்செந்தூர் சிவ பாலமுருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வருஷாபிஷேகம் மற்றும் 18 அடி உயர விஸ்வரூப பாலமுருகனுக்கு இன்று (28ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைமுன்னிட்டு நேற்று பாபநாசம் தாமிரபரணி நதியில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டது. இன்று காலை7.30 மணிக்குமேல் 8:30 மணிக்குள் விஸ்வரூப பாலசுப்பிரமணியருக்கும், மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கும் கும்பாபிஷேகம் மற்றும் வருஷாபிஷேகம் நடைபெற்றது. காலை11 மணிக்கு அலங்கார தீபாராதனை, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை திருச்செந்தூர் சிவ பாலமுருகன் பாதயாத்திரைகுழுவினர் செய்து வருகின்றனர்.