பூமிக்கு அடியில் இருந்து நடராஜர் சிலை கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2024 01:05
திருச்செந்தூர்; திருச்செந்தூர் அருகே சீர்காட்சியை சேர்ந்த வின்சென்ட் வேல்குமார் வீட்டின் பின்புறம் மரக்கன்று நடுவதற்காக தோண்டும்போது பூமிக்கு அடியில் இருந்து ஒன்றரை அடி உயரமும், சுமார் 10 கிலோ எடையும் கொண்ட நடராஜர் சிலையை கண்டெடுத்தார். சிலை திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து தாசில்தார் விசாரித்து வருகிறார்.