திற்பரப்பு, திருக்கயிலை புகுநெறி சிவனடியார் திருக்கூட்டமும், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கமும் இணைந்து நடத்தும் அன்னை தாமிரபரணிக்கு வைகாசி ஆரத்தி தீர்த்தவாரி பெருவிழா இன்று நிறைவடைகிறது.
வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத் தில் உலகின் முதல் நதியாக அன்னை தாமிரபரணி தோன்றி யதாக கூறப்படுகிறது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணிக்கு கடந்த 2018ல் மஹா புஷ்கா ரணி விழா நடந்தது. இந்த வருடம் வைகாசி விசாக நாளில் துவங்கி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதி களில் தாமிரபரணிக்கு ஜெயந்தி ஆரத்தி தீர்த்தவாரி விழாநடந்து வந்தது. இதன் நிறைவாக திருக்கயிலை புகுநெறி சிவனடியார் திருக்கூட்டமும், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கமும் இணைந்து இரண்டு நாட்கள் குமரி மாவட் டத்தில் தாமிரபரணிக்கு ஆரத்தி மற்றும் தீர்த்த வாரி நிகழ்வு நடத்தப்ப டுகிறது. நேற்று காலை திற்பரப்பு மகாதேவர் கோவில் முன் பகு தியில் நிறைவு நிகழ் வின் துவக்க நிகழ்வு நடந்தது. ஆரத்தி எடுத்து, அகஸ்தியர் மற்றும் தாமிரபரணி அன்னை திருஉருவ சிலை களுக்கு அபிஷேகம் செய்து, ஸ்லோகங்கள் கூறி சிறப்பு பூஜை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக வெள்ளாங்கோடு கேளேஸ்வரம் மகாதேவர் கோவில் படித்துறை யிலும், குழிச்சல் படித்துறையிலும், மாலை மூவாற்றுமுகம் படித்துறையிலும், இரவு திக்குறிச்சி மகாதேவர் கோவில் படித்துறை யிலும் ஆரத்தி விழா நடந்தது. இன்று (புதன்) காலை 9 மணிக்கு குழித்துறை மகாதேவர் கோவில் படித்துறையிலும், மதியம் 2 மணிக்கு சென்னித்தோட்டம் மகாதேவர் கோவில் படித்துறையிலும் ஆரத்தி எடுக்கப்பட்டு, மாலை தேங்காப்பட்டணம் கடற்கரையில் வைத்து அபிஷேகம், அர்ச்சனை மற்றும் ஆரத்தி நடக்கிறது. அகில பாரதிய சன்னியாசிகள் சங்க நதிகளின் ஒருங்கிணைப்பாளர் அன்னை ஞானேஸ்வரிகிரி, திருக்கயிலை புகுநெறி சிவனடியார் திருக் கூட்ட அமைப்பாளர் சிவ.ஜெயந்தி வெள்ளத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.