அன்னூர் அங்காளம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2024 04:05
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் - தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள அங்காளம்மன் கோவிலில் வைகாசி மாதம் மூன்றாவது செவ்வாய் கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்தன. இதில் சந்தன காப்பு அலங்காரத்தில் புஷ்ப அலங்காரத்தில் மூலவர் அம்மன்பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.