பெரியகுளம்; பெரியகுளம் கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில் இரு நாட்கள் திருவிழா நடந்து வருகிறது. தெற்குபுதுத்தெருவில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி, மா விளக்கு, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். தீச்சட்டி எடுத்து வந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.