தேவகோட்டை; தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்தின் நிர்வாகத்தில் குங்கும காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வைகாசி திருவிழா தொடங்கியது. முன்னதாக சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து குங்கும காளியம்மன் கோவிலில் திருவிழா தொடக்கத்திற்கான ஐதீக முறைப்படி பூஜைகள் நடந்தன. இதனைத் காளியம்மன் சன்னதி முன்பு இரவு 8:10 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்று பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து கார்த்தி குருக்கள் காப்பு கட்டி , அம்மனுக்கும் காப்பு கட்டி குங்கும காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிவகங்கை சமஸ்தானத்தின் நிர்வாகத்தின் சார்பில் கண்காணிப்பாளர் பாண்டி மற்றும் கிராமத்தினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஜூன் 6 மாலை அம்மன் தேரோட்டம் நடைபெறும்.