பதிவு செய்த நாள்
01
ஜூன்
2024
11:06
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில், பழமையான அகோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்திரி நரசிங்கபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில், சுத்த தீர்த்த புஷ்கரணி குளம் உள்ளது. இதில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் தீர்த்தவாரி விமரிசையாக நடைபெறும். அதேபோல், மாசி மாதம் தெப்ப உற்சவம் ஐந்து நாட்கள் விமரிசையாக நடைபெறும். உற்சவர் பிரகலாதவரதர், அலங்காரத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியருடன் தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை மூன்று முறை வலம்வருவார். இந்த குளத்தின்தண்ணீர், தற்போதுமாசடைந்து பிளாஸ்டிக் பாட்டில்கள், மது பாட்டில்கள் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக, தண்ணீரின் நிறம் மாறி உள்ளது. எனவே, இந்த குளத்தை சுத்தப்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.