பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ரங்கசமுத்திரத்தில் உள்ள உச்சி மாகாளியம்மன் கோவிலில், நடப்பாண்டு திருவிழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், மற்றும் அலங்கார வழிபாடு நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, அம்மனை தரிசித்தனர். திருவிழாவின் ஒரு பகுதியாக, வள்ளிக் கும்மியாட்டக் குழுவினர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். பயிற்சி நிறைவு பெற்ற நிலையில், இன்று, மாலை, 6:00 மணிக்கு, கோவிலின் கிழக்குப் பகுதியில், வள்ளிக் கும்மி ஆட்டக்குழுவினரின் அரங்கேற்றம் நடக்கிறது.