உத்தரகோசமங்கை சிவன் கோயில் கும்பாபிஷேக பணிகள் ஜரூர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2024 11:06
ராமநாதபுரம்; உத்தரகோசமங்கை மங்ளேஸ்வரி உடனுறை மங்களநாத சுவாமிகோயில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடக்கிறது. உத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாத சுவாமி கோயிலில் பல்வேறு நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகையில் அம்மன் கோயில் உள்பிரகாரம், வெளி பிரகாரங்கள், நந்தி மண்டபம், அம்மன் சன்னதி கோபுரம், மங்களநாதசுவாமி சன்னதி கோபுரம், நடராஜர் சன்னதி கோபுரம், கிழக்கு ராஜகோபுரம், ராஜகோபுரம் ஆகியவை புதுப்பிக்கும் பணிகள் நடக்கவுள்ளன. இதில் கோயில் பிரகாரத்தில் தஞ்சாவூரிலிருந்து கொண்டு வரப்பட்ட மணல், சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய் போன்ற பொருள்களை அரைத்து சேர்த்து கட்டுமானங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது ராஜகோபுரங்களில் சாரம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. விரைவில் கோபுரங்களில் உள்ள சுதைகள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளன. இதற்கான பணிகளை ராமநாதபுரம் சமஸ்தானம் நிர்வாகத்தினர்செய்கின்றனர்.