Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை சிவன் கோயில் ... கிள்ளை காளியம்மனுக்கு பட்டு புடவையுடன் சீர் வரிசை கொண்டு வந்த முஸ்லிம்கள் கிள்ளை காளியம்மனுக்கு பட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காயத்ரி ஜெப யக்ஞம்; குங்கும அர்ச்சனையால் பெண் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
காயத்ரி ஜெப யக்ஞம்; குங்கும அர்ச்சனையால் பெண் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2024
11:06

சிவாஜிநகர் : சிவாஜி நகர் திம்மையா சாலை காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் சிறப்பு காயத்ரி ஜெப யக்ஞம் விமரிசையாக நடந்தது.

காயத்ரி மஹா மந்திரம், விஸ்வாமித்ர மகரிஷியால் கொடுக்கப்பட்டது. இந்த மந்திரத்தை ஜெபிப்பதால், ஒளிமயமான வாழ்க்கை அமையும் என்பது உறுதி. இத்தகைய வலிமை தரும், சிறப்பு காயத்ரி மஹா மந்திர ஜெப யக்ஞம், மதுரையை தலைமை இடமாக கொண்ட, பெங்களூரு காயத்ரி பரிவார் அமைப்பு சார்பில், சிவாஜி நகர் திம்மையா சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று நடந்தது. பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

விழாவின் துவக்கத்தில், அச்சுதா, அனந்தா, கோவிந்தா என்ற நாமத்ரயம் மந்திரத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. தொடர்ந்து கங்கை, காவிரி, கோதாவரி உட்பட எல்லா நதிகளுக்கும் நமஸ்காரம் செய்யப்பட்டது. இதன்பின், சங்கல்பம் செய்யப்பட்டது. கணேச மந்திரம், பிரஹல தேவதா காயத்ரி, சூரிய நமஸ்காரம், காயத்ரி தியானத்துடன் மந்திரம் 108 முறை, நடப்பு மாதம் வைகாசி என்பதால், கருட தியானம், கருட ஸ்தோத்திரம், தன்வந்த்ரி தியானம், தன்வந்திரி ஸ்தோத்திரம், நான்கு வேதங்கள், வருண காயத்ரி, பிரார்த்தனை, கருடன், சுதர்சன, நரசிம்ம மந்திரம், முக்கிய மந்திரங்களான கிருஷ்ணன், தனவந்த்ரி, ம்ருதுஞ்ஜெய மந்திரம், லட்சுமி குபேர, பத்ரகாளி, நவகிரஹ காயத்ரி, ஆஞ்சநேய மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டன. ஆலயத்தில் உள்ள அனைத்து விக்ரகங்கள் முன்பும் அதற்குரிய மந்திரத்தை சிறுவர்கள், சிறுமியர் பாடினர். இதை தொடர்ந்து, சிறுமி காயத்ரி சொல்ல, பக்தர்கள் ஸ்ரீகாயத்ரி யஷ்டோத்தர சத நாமாவளி படித்து குங்கும அர்ச்சனை செய்தனர். விழா ஏற்பாடுகளை பெங்களூரு காயத்ரி பரிவார் அமைப்பின் கன்வீனர் வி.கே.கண்ணன், துணை கன்வீனர் பி.கே.சசிரேகா ஆகியோர் தலைமையில் அமைப்பு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

பெங்களூரு காயத்ரி பரிவார் அமைப்பு சார்பில் நடந்த சிறப்பு காயத்ரி ஜெப யக்ஞம் விழாவில், காயத்ரி மந்திரம் வாசித்த சிறுமி காயத்ரி, கன்வீனர் வி.கே.கண்ணன். (அடுத்த படம்) ஜெபித்த பக்தர்கள். இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர், பெங்களூரு. குருஜி எங்களுக்கு வழிகாட்டினார். எங்கள் வீட்டில் நல்ல நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. என் மனதுக்கு தைரியத்தை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் எந்த முடிவெடுத்தாலும், காய்தரி மந்திரம் ஜெபித்தால் நல்லபடியாக முடிகிறது. பிரமிளா, ஹலசூரு.

காயத்ரி பரிவார் சார்பில் பாண்டுரங்கா கோவிலில் வாரா வாரம் காயத்ரி ஜெப யக்ஞம் நடத்தி வருகிறோம். இக்கோவில் சூழ்நிலை, விக்ரஹங்கள் அருமையாக உள்ளது. இந்த வாரம் இங்கு செய்யலாம் என முடிவு செய்து நடத்தினோம். பி.ஜி.ராஜ்குமார், மல்லேஸ்பாளையா.

பல ஆண்டுகளாக எனக்கு குழந்தை இல்லை. என்னுடன் பணியாற்றும் ஊழியர் கூறியபடி, தஞ்சாவூரில் உள்ள கோவிலுக்கு சென்று வேண்டிக் கொள்ளுங்கள் என்றார். நானும், எனது மனைவியும் கோவிலுக்கு சென்று வந்த 40 நாட்களுக்கு பின், எங்களுக்கு நல்ல செய்தி கிடைத்தது. பி.எஸ்.ராஜ்குமார், வங்கி மேலாளர், எல்.பி.சாஸ்திரி நகர்

ஓராண்டாக பிரதோஷம் தோறும் இங்கு வருகிறேன். பெண் ஒருவர், இக்கோவிலுக்கு 11 ஆண்டுகளாக வருகிறேன். சுவாமி, அம்பாளின் அருளால், அவரின் மூன்று குழந்தைகளில் இருவருக்கு திருமணமாகி விட்டது என்றார்.– ராம்பிரசாத், ஜாலஹள்ளி.

காயத்ரி ஜெபம் குறித்து அறிந்து, இந்த அமைப்பில் இணைந்தோம். மும்பையில் இருந்தபோது, சவுந்தர்ய லஹரி வகுப்புகளுக்கு செல்வேன். ஆனால், காயத்ரி ஜெப யக்ஞம் பாடியதில்லை. எங்கள் வீட்டில் தினமும் இதை பாடுகிறேன்.– ஸ்ருதி, ஆனந்தசோமி, எல்.பி.எஸ்., நகர்.

இந்த குழுவில் 2015 முதல் பங்கேற்று வருகிறேன். காயத்ரி மந்திரம் படிக்கும் போதெல்லாம், பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு சம்பவம் நடக்கும் போதெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. அனைத்து மந்திரங்களும் எனக்கு அத்துபடியாகிவிட்டது.– நமச்சிவாயம், தொழிலதிபர், ஜீவன்பீமா நகர்.

காயத்ரி மந்திரத்தின் பலன் என்ன?

காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில் தலைமை அர்ச்சகர் ஆர்.பாலசந்திர சிவம் அருளாசியில் கூறியதாவது: காயத்ரி மந்திரம் என்பது சூரியனின் வழிபாடு. சூரியன் தான் நமக்கு எல்லாம் கொடுக்கிறது. சூரியனின் அருள் இல்லாமல், எதுவும் நடப்பதில்லை. காயத்ரி மந்திரத்தின் சிறப்பு, சூரியனின் வழிபாடு. காயத்ரி என்பது அறிவுரை கொடுக்கிறது; சாவித்திரி என்பது மன உறுதி அளிக்கிறது; சரஸ்வதி என்பது கல்வியை அளிக்கிறது. மனதில் உறுதி இல்லையென்றால், முன்னுக்கு வர முடியாது. இம்மூன்றையும் கொடுப்பது காயத்ரி மந்திரம். காலையில் சூரியன் உதிக்கும் முன், மதியம் நண்பகலிலும், மாலையில் சூரியன் மறையும் முன்பும் வழிபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: ஐப்பசி மாத கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவாரூர்; 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜமாதங்கி அம்மன் திருக்கோவிலில் நெய்க்குள தரிசனம் விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு திரளான ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வட மாநிலங்களில் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை பவுர்ணமியில் தேவ் தீபாவளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar