திருமறைநாதர் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் பெயர்ந்து விழும் சிமெண்ட் பூச்சுகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2024 05:06
மேலுார்; திருவாதவூர் திருமறைநாதர் கோயில் திருக்கல்யாண மண்படம் மற்றும் கோயில் சுவர்களின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் பக்தர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இக்கிராமத்தில் உள்ள திருமறைநாதர் கோயில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருமறைநாதர், வேநாயகி மற்றும் பிரியாவிடையுடன் திருக்கல்யாணம் நடைபெறும். இம் மண்டபம் கடந்த 50 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. தவிர மண்டபத்தின் ஒரு பகுதியில் சிவன், பிள்ளையார் சுவாமிகள் அறைகளும் சேதமடைந்துள்ளது. பக்தர்கள் கூறியதாவது : சுவாமி திருகல்யாணம் மற்றும் பக்தர்கள் கல்யாணம் நடைபெறும் மண்டபத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிகிறது. தவிர காசி விஸ்வநாதர், விநாயகர் சன்னதிகள் முன்புறம், மண்டபம் மற்றும் கோயில் உள்பகுதியில் உடைகல் மற்றும் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்துள்ளது. சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் அச்சத்துடனே கோயிலுக்கும் வரவேண்டியுள்ளது. அதனால் கோயிலை அறநிலையத்துறையினர் மராமரத்து பார்க்க வேண்டும் என்றனர். நிர்வாகிகள் கூறுகையில்," விரைவில் மராமத்து பார்க்கப்படும்" என்றனர்.