Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவிலில் ...  மேட்டுப்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா மேட்டுப்பாளையம் பட்டத்தரசி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பராமரிப்பு பணிக்கு பின் மீண்டும் சோளிங்கரில் ரோப்கார் சேவை துவங்கியது
எழுத்தின் அளவு:
 பராமரிப்பு பணிக்கு பின் மீண்டும் சோளிங்கரில் ரோப்கார் சேவை துவங்கியது

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2024
08:06

சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். இந்த மலைக்கோவிலுக்கு, 1,305 படிகள் கொண்ட மலைப்பாதை உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக, மார்ச் 8ல், 20 கோடி ரூபாய் மதிப்பில் பக்தர்கள் பங்களிப்புடன் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த ரோப்கார் சேவை வாயிலாக, தினசரி ஆயிரம் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களாக செயல்பட்டு வரும் இந்த ரோப்கார் சேவை, 5 மற்றும் 6ம் தேதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று மீண்டும் வழக்கம் போல் இயங்கியது. காலை 8:00 மணி முதல் ரோப்கார் வளாகத்தில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று காலை சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட பின் பக்தர்கள் ரோப்காரில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆண்டாள் நாச்சியார் உற்சவம்: lராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் மலைக்கோவிலில் அருள்பாலிக்கும் யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள்கோவில் சோளிங்கர் நகரில் அமைந்துள்ளது. கொண்டபாளையம் மலையடிவாரத்தில் பிரம்மதீர்த்தம் எனப்படும் தக்கான்குளம் உள்ளது. தக்கான் குளக்கரையில், வரதராஜபெருமாள் அருள்பாலிக்கிறார். கோவில் நகரமான சோளிங்கருக்கு திரளான பக்தர்கள் தினசரி வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். வைகாசி வெள்ளிக்கிழமையான நேற்று மாலை பக்தோசித பெருமாள் கோவில் ஆண்டாள் நாச்சியார் உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட கேடயத்தில், மங்கல வாத்தியங்கள் முழங்க, ஆண்டாள் நாச்சியார் உள்புறப்பாடு எழுந்தருளினார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar