நத்தம் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா; முகூர்த்தக்கால் நடப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2024 04:06
நத்தம், நத்தம் காமராஜர் நகர் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா வருகிற 18-ம் தேதி அழகர் மலை தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.இதில் மாவிலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகளுக்கு பின் முகூர்த்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து மூலவர் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து வருகிற 21-ம் தேதி பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும், 25-ம் தேதி அம்மன் நகர்வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கிடாய் வெட்டி இரத்தம் குடிக்கும் நிகழ்வு வருகிற ஜுலை 2-ம் தேதி இரவும், மறுநாள் அன்னதானமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை காமராஜர் நகர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.