காஞ்சிபுரம் ஆதிகாமாட்சியம்மன் கோயிலில் விஜயேந்திரர் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2024 10:06
காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில், ஆதிகாமாட்சி என அழைக்கப்படும் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் 1 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று முன்தினம் மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. மாலை 6:30 மணிக்கு சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய ஆதிகாமாட்சியம்மன் ராஜ வீதிகளில் உலா வந்தார். இந்நிலையில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஆதிகாமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று மூலவர் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை செய்து வழிபட்டார். முன்னதாக கோவில் அறங்காவலர் குழுவினர், ஹிந்து சமய அறநிலையதுறையினர், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் விஸ்வகர்ம சமுதாயத்தை சேர்ந்தவர்கள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு பூரண கும்ப மரியாதை அளித்து, கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கும், கோவில் நிர்வாகிகளுக்கும் சங்கர விஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கினார்.