முக்களத்தியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை ராகு கால பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2024 05:06
திட்டக்குடி; திட்டக்குடி முக்களத்தியம்மன் கோவிலில், வெள்ளிக்கிழமை ராகு கால சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
திட்டக்குடி முக்களத்தியம்மன் கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ராகு கால சிறப்பு பூஜை நடக்கிறது. இதனால் தீராத கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இன்று வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் பூசாரி குமரன், பூஜைகளை செய்தார். திட்டக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.