பதிவு செய்த நாள்
15
ஜூன்
2024
10:06
விருத்தாசலம்; மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்றதை கொண்டாடும் விதமாக கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், மாவட்ட பா.ஜ.க., சார்பில் பாரத பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றதை கொண்டாடும் வகையில், சிறப்பு வழிபாடு நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் பொறியாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அதில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, பிரதமர் மோடி அறிவுறுத்தலின்படி, கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னதாக பக்தர்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது. ஓ.பி.சி., அணி மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ், ஒன்றிய தலைவர் வெங்கடேசன், வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் பரந்தாமன், த.மா.கா., நகர தலைவர் அசோக்குமார், ஒன்றிய நிர்வாகி நித்திஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.