ஆனி முதல் சனி; லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2024 02:06
கோவை; கோவை, சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் ஆனி மாதம் பிறப்பு, ஆனி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்பம் மற்றும் சிறப்பு வஸ்திர அலங்காரத்தில் பெருமாள் மற்றும் தாயார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.