Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி முதல் சனி; லட்சுமி நாராயண ... திருமுருகன்பூண்டி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் யாகசாலை பூஜை துவங்கியது திருமுருகன்பூண்டி கரி வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வழக்கறிஞர் கமிஷனர் முன்னிலையில் எண்ணப்பட்ட வனபத்ர காளியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை
எழுத்தின் அளவு:
வழக்கறிஞர் கமிஷனர் முன்னிலையில் எண்ணப்பட்ட வனபத்ர காளியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2024
02:06

மேட்டுப்பாளையம்: வனபத்ர காளியம்மன் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள், கோர்ட் உத்தரவுப்படி வழக்கறிஞர் கமிஷனர் முன்னிலையில் எண்ணப்பட்டன.

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஒன்றாகும். வழக்கமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள், கோவிலில் நடைபெறும். அதன்படி கடந்த மார்ச் மாதம் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. மூன்று மாதங்களுக்கு பிறகு நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் கோவிலில் நடந்தன. இந்நிலையில் கோவிலில் தட்டு காணிக்கை கையாடல் குறித்து, பூசாரிகள் நான்கு பேர் மீதும், பரம்பரை அறங்காவலர் மீதும், கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். அதன் பெயரில் பூசாரிகள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, பின்பு நீதிமன்ற காவலில் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். ஆனால் பரம்பரை அறங்காவலர் வசந்தா தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில் பரம்பரை அறங்காவலர் வசந்தாவின் மகன் நாகேந்திரன்,கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது, எனது முன்னிலையில் நடைபெற வேண்டும் என, சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிபதி, வழக்கறிஞர் கமிஷனர் ஒருவரை நியமித்து, அவர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும்படி உத்தரவு பிறப்பித்தார். இதை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கமிஷனர் முருகானந்தம் முன்னிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் ஹர்ஷினி, வனபத்ரகாளியம்மன் கோவில் தக்கார் மேனகா, கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி ஆகியோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகளில் ஈடுபட்டனர். ஒவ்வொரு உண்டியலுக்கும், இரண்டு வெவ்வேறு சாவிகள் போட்டு திறக்கும் வகையில் பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது. அதில் ஒரு சாவி கோவில் உதவி கமிஷனரிடமும், மற்றொரு சாவி பரம்பரை அறங்காவலர் வசந்தாவிடமும் இருக்கும். பரம்பரை அறங்காவலர் தலைமறைவாக இருப்பதால், அவரிடம் உள்ள சாவிகள் உண்டியல் திறக்க, கொண்டு வராததால், பூட்டுகளை கட்டிங் இயந்திரம் வாயிலாக கட் செய்யப்பட்டன. அதன் பிறகு, 20 பொது உண்டியல்களில் இருந்த காணிக்கைகள், இரண்டு தட்டு காணிக்கை உண்டியல்களில் இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டன. இப்பணியில் உடுமலையை சேர்ந்த, சேவர் கொடியோன் சேவை குழு, நிர்வாகிகள் பிரேமா, தண்டபாணி ஆகியோர் தலைமையில்,130 பேர் ஈடுபட்டனர். இப்பணிகளை வருவாய் துறை மண்டல துணை தாசில்தார் சுரேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் சரண்யா மற்றும் போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகை கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கனுார்; மணலிப்பட்டு செங்கழுநீர் அம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.திருக்கனுார் அடுத்த ... மேலும்
 
temple news
சென்னை; சென்னையில் முதல் முறையாக, மூன்று நாள் பத்ராசல ராமர் தரிசனம் நடக்க உள்ளது. இந்த நிகழ்வு ‘பக்த பாத ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் உள்ள ஆனந்த கால பைரவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar