திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. முன்னதாக கடந்த 14ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. காலை யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, கடன் புறப்பாடாகி 7:30 மணிக்கு வேத மந்திரம் முழங்க புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.