புதிய குதிரை வாகனத்தில் பிரசன்ன வரதராஜ பெருமாள் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2024 11:06
திருநகர்; மதுரை திருநகர் மகாலட்சுமி நெசவாளர் காலனி வரசித்தி விநாயகர் கோயில் பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில் புதிய குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. கோயிலுக்கு உபயதாரர்களால் வழங்கப்பட்ட புதிய மரக்குதிரை வாகனத்திற்கு காலையில் பூஜை நடந்தது. பின்பு சுவாமிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வர்ண பூஜை, பஞ்சகவ்ய பூஜை நடந்தது. பின்பு குதிரை வாகனத்திற்கு கண் திறக்கப்பட்டது. புதிய குதிரை வாகனத்தில் பிரசன்ன வரதராஜ பெருமாள் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் உலா நிகழ்ச்சி நடந்தது.