பதிவு செய்த நாள்
16
ஜூன்
2024
11:06
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி ஜடா முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தின் போது கருவறையில் நாக பாம்பு வந்ததால் பக்தர்கள் பரவசம்.
விழாவையொட்டி முன்னதாக நேற்று முன்தினம் காசி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், திருமலைக்கேணி, அழகர் கோயில் மலை, வைகை உள்ளிட்ட பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் மேளதாளம் முழங்க கோவில் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து கணபதி யாக மஹா சங்கர்ப்பம் வாஸ்து சாந்தி, யாக சாலையில், வேத பாராயணம்,யந்திர ஸ்தாபணம், மூலிகையினல் யாக பூஜைகள் நடைபெறும்.
தொடர்ந்து நேற்று காலை கணபதி யாக மஹா சங்கல்ப்பம், யாக சாலையில் வேத பாராயணம், நாடி சந்தானம் உயிர் ஊட்டுதல் மூலிகையினால் யாக, பூர்ணாகுதி தீப ஆராதனையை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கருடர்கள் வானத்தில் வட்டமிட அதைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் கோஷமிட்டர். கும்பாபிஷேகத்தை திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் குழுவினர் நடத்தி வைத்தனர். விழாவில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட கவுன்சிலர் க.விஜயன், தொழிலதிபர் பி.எம்.எஸ்.கே.அபுதாஹிர்,ஊராட்சித் தலைவர் தமிழரசி கார்த்திகைசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஹரிஹரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக கும்பாபிஷேகத்தின் போது ஜடாமுனிஸ்வரர் கோயில் கருவறையில் நாக பாம்பு வந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.