வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டி அருகே ராஜகவுண்டன்பட்டியில் விநாயகர், ராஜகாளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை கிராம தெய்வங்களுக்கு கனி வைத்து வழிபட்ட பின்னர் தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. வெள்ளபொம்மன்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர் ஜெகநாதன் அய்யர் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தி வைத்தனர். சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனர்.